Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியர்களுக்கு வாழ்நாளுக்கான கோல்டன் விசா வழங்கும் UAE அரசு – யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Golden Visa for Indians : இந்தியர்களுக்கான ஐக்கிய அரபு அமிரேட்ஸ்'பரிந்துரை அடிப்படையில் வாழ்நாளுக்கான கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி முன்பு போல முதலீடு, தொழில் இல்லாமலேயே இந்த கோல்டன் விசாவைப் பெறலாம். இந்த கட்டுரையில் கோல்டன் விசா பெறுவதற்கான தகுதிகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியர்களுக்கு வாழ்நாளுக்கான கோல்டன் விசா வழங்கும் UAE அரசு – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 06 Jul 2025 21:26 PM

கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை தரம் போன்ற காரணங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வளரும் பொருளாதாரம், தரமான வசதிகள் மற்றும் வரி சலுகைகள் போன்ற பல காரணங்களால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்தியர்களுக்கு (India) பிடித்த இடமாக மாறியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இந்தியர்களுக்காக பரிந்துரை அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகள் முதற்கட்டமாக இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. முன்புபோல் சொத்துகளில் முதலீடு செய்யாமலே அல்லது வணிக முதலீடுகள் இல்லாமலே இந்த விசாவைப் பெறும் வாய்ப்பு தற்போது இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், வாழ்நாள் முழுவதும் செல்லக்கூடிய ஐக்கிய அரபு அமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற முடியும்.

கோல்டன் விசா என்றால் என்ன?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் முதலில் பில்லியனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உயர்  அதிகாரிகளுக்காக வழங்கப்பட்டது. பின்னர் இந்திய மதிப்பில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முதலீடு செய்பவர்களுக்கு 10 ஆண்டு விசா கிடைக்கும் வகையில் தளர்வு அளிக்கப்பட்டது.

கோல்டன் விசா பெறுவதற்கான தகுதிகள்

தற்போது புதிய முறையில் ஆசிரியர்கள், நர்சுகள், யூடியூப் கிரியேட்டர்கள், கல்வி மற்றும் மருத்துவத்துறையில் 15க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், இளங்கலை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த புதிய வகை வீசாவிற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.

இந்த விசா பெற துபாய் செல்ல தேவையில்லை. மேலும் ரூ.23.3 லட்சம் கட்டணம் செலுத்தினால் கோல்டன் விசா கிடைக்கும். Rayed Group என்னும் நிறுவனம் இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு அனுப்பும். உங்கள் தொழில், சமூக பங்களிப்பு, குண நலன்கள், சமூக வலைதள நடவடிக்கைகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.

இந்தியா முதல் நாடாக தேர்வு!

இந்த புதிய திட்டம்  விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் என்ற உடன்படிக்கைக்குட்பட்ட நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது இருநாடுகளுக்கிடையேயான வணிக, பண்பாட்டு மற்றும் அரசியல் உறவுகள் வலுவடைந்ததற்கான சான்றாகும்.

 கோல்டன் விசாவிவின் நன்மைகள்

  • வாழ்நாள் முழுவதும் இந்த விசாவை பயன்படுத்த முடியும்.
  • நம் குடும்பத்தினரை அழைத்து செல்லும் உரிமை
  • தனப்பட்ட வேலை, தொழில், முதலீடு அனைத்தும் சுதந்திரமாக செய்ய முடியும்.
  • இந்த புதிய கோல்டன் விசா திட்டம் இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிரந்தர முதலீட்டு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பாக கருதப்படுகிறது.

கோல்டன் விசாவிற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்

  • பாஸ்போர்ட்

  • கல்வி அல்லது தொழில்முறை சான்றிதழ்கள்

  • வருமானம் அல்லது முதலீட்டுக்கான ஆதாரங்கள்

  • அங்கீகரிப்பு கடிதங்கள் அல்லது பணிப் பணி உறுதி கடிதம்