இந்தியர்களுக்கு Visa On Arrival-ஐ விரிவுப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.. மேலும் 6 நாடுகள் பட்டியலில் இணைப்பு!
UAE Expands Visa on Arrival for Indians | வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் அம்சத்தை ஐக்கிய அரபு அமீரகம் விரிவுப்படுத்தி அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே மூன்று நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த பட்டியலில் மேலும் 6 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம், ஜூன் 30 : ஐக்கிய அரபு அமீரகம் (UAE – United Arab Emirates) வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் (Visa on Arrival) அம்சத்தை விரிவுபடுத்தியுள்ளது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா (Australia), கனடா (Canada), ஜப்பான் (Japan) உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விசா ஆன் அரைவல் மூலம் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் அம்சத்தை விரிவுபடுத்திய ஐக்கிய அரபு அமீரகம்
முன்னதாக அமெரிக்கா (America), ஐரோப்பா யூனியன் (Europe Union), யுனைடெட் கிங்டம் (United Kingdom) ஆகிய நாடுகளின் கிரீன் கார்டு (Green Card) வைத்திருந்தால் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா ஆன் அரைவல் மூலம் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மேலும் 6 நாடுகளுக்கு விரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசா ஆன் அரைவல் மூலம் பயணம் செய்யலாம்.




பட்டியலில் மேலும் 6 நாடுகளை இணைத்த ஐக்கிய அரபு அமீரகம்
UAE Embassy in Delhi highlights expanded visa-on-arrival for Indian nationals
Read @ANI Story | https://t.co/wk920y5TX4#UAE #Delhi #Visa pic.twitter.com/I4G155YrvI
— ANI Digital (@ani_digital) June 29, 2025
இந்தியா – ஐக்கிய அரபு அமீரக இணைப்பின் தொடக்கம்
சுலபமான பயண முறைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான மனித உறவை மேம்படுத்த உதவுகிறது. இந்த முன்னெடுப்பு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான கூட்டாண்மையின் தொடக்க சின்னமாக விளங்கும் என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்த விசா ஆன் அரைவல் அம்சத்தை விரிவுப்படுத்தியுள்ளது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குடும்பங்கள், தொழிலதிபர்கள் தங்களது குடும்பங்களுடம் மிக எளிதாக சந்திப்பதற்கும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கும் இது மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.