AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கனடா உடன் இனி எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம் – அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவு..

US President Donald Trump: கனடா டிஜிட்டல் சேவை வரியை அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா உடனான வர்த்தகத்தை இனி தொடர மாட்டோம் என அறிவித்துள்ளார். மேலும், கனடா நாட்டிற்கு புதிய வரி விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனடா உடன் இனி எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம் – அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவு..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jun 2025 10:38 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ச் டிரம்ப்: கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், விரைவில் அந்த நாட்டிற்கான புதிய கட்டண விகிதத்தை அறிவிப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல மாதங்களாக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு, கனடா டிஜிட்டல் சேவை வரியை அறிவித்ததைத் தொடர்ந்து வந்ததுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப், இதனை, எங்கள் நாட்டின் மீதான நேரடி மற்றும் அப்பட்டமான தாக்குதல் இது என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அவரது பதிவில், “ வரியின் அடிப்படையில் கனடாவுடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாத காலங்களையும் நாங்கள் இதன் மூலம் நிறுத்திக் கொள்கிறோம்.

கனடா உடனான வர்த்தகத்தை நிறுத்திய அமெரிக்கா:

இது உடனடியாக அமலுக்கு வருகிறது அடுத்த ஏழு நாட்களுக்குள் அமெரிக்காவுடன் வணிகள் செய்ய கனடா செலுத்தும் வரியை விரைவில் தெரியப்படுத்துவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தைகளின் போது, அதிபர் டிரம்ப் டிஜிட்டல் சேவை வரிகள் குறிப்பிட்ட பிரச்சினையாக கருதி வருகிறார். இந்நிலையில் கனடாவில் வரும் ஜூன் 30-ம் தேதி முதல் டிஜிட்டல் வரி சேவை நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை வரிகள் என்பது, பொருட்கள் மீதான வரிகளுக்கு மாறாக, ஆன்லைன் சேவைகளுக்கு வரி விதிக்கும் ஒரு வழியாகும். இந்த வரிகளைக் கொண்ட நாடுகள் ஆன்லைனில் செயல்படும் பெரிய நிறுவனங்களிடமிருந்து வருவாயைச் சேகரிக்கலாம் – வணிகம் லாபகரமானதாக இல்லாவிட்டாலும் கூட இதனை வசூல் செய்ய முடியும்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு என்ன காரணம்:


அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக மெட்டா, ஆப்பிள், கூகிள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், DST களால் விகிதாசாரமாகப் பாதிக்கப்படுகின்றன என்று 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகத் துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டு (2024) 349 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து, அமெரிக்கப் பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக கனடா உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டு (2024) 413 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு கனடா ஏற்றுமதி செய்தது, இது வெளிநாட்டுப் பொருட்களின் மூன்றாவது பெரிய மூலமாகும். தற்போது அமெரிக்கா கனடா மீது அதிக வரி விதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது இரு நாட்டு வர்த்தகத்தையும் வெகுவாக பாதிக்கும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Follow Us