Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Saudi Arabia : இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா நிறுத்தம் அறிவித்த சவுதி அரேபியா!

Saudi Arabia Halts Visas for India and 13 Others | சவுதி அரேபியா அரசு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா நிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சவுதி அரேபியாவின் இந்த விசா நிறுத்த கட்டுப்பாட்டால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Saudi Arabia : இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா நிறுத்தம் அறிவித்த சவுதி அரேபியா!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Jun 2025 18:32 PM

ரியாத், ஜூன் 10 : இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலை உட்பட சில விசாக்களை சவுதி அரேபியா அரசு (Saudi Arabia Government) நிறுத்தி வைத்துள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், 14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விடுத்துள்ள விசா கட்டுப்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்

இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றனர். இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் ரியாலுக்கு மதிப்பு அதிகம். இதன் காரணமாக அங்கு வேலை செய்தால் அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால், ஏராளமான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் சென்று வேலை செய்கின்றனர். இந்தியா மட்டுமன்றி, மேலும் சில நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் சவுதி அரேபியாவுக்கு சென்று வேலை செய்கின்றனர். இந்த நிலையில், தன சவுதி அரேபியா அரசு இந்த விசா நிறுத்தத்தை கொண்டு வந்துள்ளது.

விசா நிறுத்தத்தை அறிவித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியா அரசு விசா நிறுத்தம் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை விசா, இ – விசா, குடும்ப உறுப்பினர் வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவற்றை சவுதி அரேபியா அரசு நிறுத்தி வைத்துள்ளது. சவுதி அரேபியாவில் ஹஜ் காலம் நடைபெற்று வரும் நிலையில், பலரும் இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 2024 ஆம் ஆண்டு ஹஜ் காலம் நடைபெற்ற போது, அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மற்ற விசாக்கள் மூலம் வந்தவர்கள் சட்ட விரோதமாக ஹஜ் விழாவில் பங்கேற்றனர். இதன் காரணமாகவே இந்த ஆண்டு, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2025 மே மாதம் தொடங்கிய இந்த கட்டுப்பாடு 2025, ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...