Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எரிமலையில் தவறி விழுந்த இளம் பெண்.. 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

Brazil Influencer Body Rescued From Volcano | பிரேசிலை சேர்ந்த 26 வயதான இன்ஸ்டாகிடாம் இன்ஃப்ளூயன்சர் மரின்ஸ் ஜூலியானா, மலை ஏறும்போது தவறி சுமார் 600 அடி ஆழம் கொண்ட எரிமலை பள்ளத்தில் வீழ்ந்தார். அவரை மீட்பதற்காக கடந்த சில நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எரிமலையில் தவறி விழுந்த இளம் பெண்.. 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
மரின்ஸ் ஜுலியானா
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jun 2025 13:07 PM

ஜகர்த்தா, ஜுன் 26 : இந்தோனேசியாவுக்கு (Indonesia) சுற்றுலா சென்ற ஜுலியானா என்ற 26 வயது இளம் பெண்  ஒருவர் அங்குள்ள எரிமலையில் (Volcano) தவறி விழுந்து உயிருக்கு போராடி வங்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜூலியானாவின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 4 நாட்களுக்கு பிறகு அவரது உடல் எரிமலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா சென்ற இளம் பெண் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுற்றுலாவுக்கு சென்ற பெண் எரிமலையில் தவறி விழுந்து பலி

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் மரின்ஸ் ஜுலியானா. 26 வயதாகும் இவர் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக உள்ளார். இதனால் இவர் மிகவும் பிரபலமான நபராக உள்ளார். இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக இருப்பதன் காரணமாக ஜுலியான வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அவற்றை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ஜூலியான இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

2 நாட்களாக உயிருக்கு போராடிய ஜூலியானா

அப்போது ஜூன் 22, 2025 அன்று இந்தோனேசியாவில் உள்ள சுமார் 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு, ஒரு குழுவுடன் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜுலியானா எதிர்பாராத விதமாக எரிமலையில் இருந்த ஒரு சுமார் 600 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் ட்ரோன் மூலம் ஜூலியானா எங்குள்ளார், அவரின் நிலை எப்படி உள்ளது என்பதை சோதனை செய்தனர்.

4 நாட்களுக்கு பிறகு ஜீலியானாவின் சடலம் மீட்பு

அப்போது அவர், மணலில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை மீட்பு படையினர் கண்டறிந்தனர். ஆனால் கீழே இறங்கி அவரை மீட்கும் பணிகள் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஜூலியானாவில் உடல் இரண்டு நாட்களாக எரிமலைக்குள் இருந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.