Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Russia Vs Ukraine : ஒரே நாளில் உக்ரைன் மீது 550 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா.. உச்சக்கட்ட பரபரப்பு!

Russia Attacked Ukraine with 550 Drones | ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மட்டும் ரஷ்யா, உக்ரைன் மீது சுமார் 550 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

Russia Vs Ukraine : ஒரே நாளில் உக்ரைன் மீது 550 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா.. உச்சக்கட்ட பரபரப்பு!
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2025 07:12 AM

கீவ், ஜூலை 05 : ரஷ்யா மற்றும் உக்ரைன் (Russia and Ukraine) இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 03, 2025) மட்டும்  உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 550 ட்ரோன்களை (Russia Attacked Ukraine With 550 Drones) கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் மிக கடுமையான பாதிப்புகளை அடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 550 ட்ரோன்கள் தாக்குதல் (Drone Attack) நடத்திய நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் கடும் போர்

நேட்டோ அமைப்பின் விரிவாக்கத்தை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதும் ரஷ்யா உக்ரைன், நேட்டோவில் இணைவதை கடுமையாக எதிர்க்கிறது. இதன் காரணமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தை மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல முயற்சிகளை கையில் எடுத்தும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி நிலவாமல் போரின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் நேற்று (ஜூலை 04, 2025) அறிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் பதிவு

ஒரே நாளில் சுமார் 550 ட்ரோன்களை கொண்டு தாக்கிய ரஷ்யா

உக்ரனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா முடுக்கிவிட்டிருக்கிறது. முக்கியமாக கீழ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. வானில் ஏவுகணைகள், ட்ரோன் குண்டு வெடிப்புகள் ஒளிர்ந்தபடி இருந்தன. இரவு முழுவதும் 550 டோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.