Iran : சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு இல்லை.. ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அறிவிப்பு!
Iran Halts IAEA Cooperation | ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததும். இதற்கிடையே அணுசக்தி உற்பத்தி விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், சர்வதேச அணுசக்தி முகமைக்கு அளித்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துவதாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அறிவித்துள்ளார்.

துபாய், ஜூலை 03 : சர்வதேச அணுசக்தி முகமைக்கு (International Atomic Energy Agency) அளித்து வந்த ஒத்துழைப்பை நிறுத்துவதாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் (Iran President Masoud Pezeshkian) அறிவித்துள்ளார். சமீபத்தில், அணு ஆயுதங்கள் தயாரிக்கும் (Nuclear Weapon Production) விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (America and Israel) ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில், ஈரானின் இந்த அதிரடி முடிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தியா இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீது தாக்கத்தில் நடத்துமோ என்று ஜூன் 13, 2025 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை கண்டித்து ஈரானும், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவே வந்தது. குறிப்பாக இந்த மோதல்களின் போது இரு தரப்பிலிருந்தும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஈரான் – இஸ்ரேல் விவகாரம் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அமைதியை கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தின.




இதற்கு இடையே ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஆனால் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஈரான் அடிபணியவில்லை. இந்த நிலையில், ஜூன் 22, 2025 அன்று ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டன. இது ஈரானை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலையில், அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்தது.
போர் நிறுத்தத்தை அறிவித்த டிரம்ப்
“CONGRATULATIONS TO EVERYONE! It has been fully agreed by and between Israel and Iran that there will be a Complete and Total CEASEFIRE…” –President Donald J. Trump pic.twitter.com/hLTBT34KnG
— The White House (@WhiteHouse) June 23, 2025
இதற்கு பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஈரான் – இஸ்ரேல் மோதல் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில், அமைதி நிலவுகிறது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததும். இருப்பினும் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்திய நிலையில், இனியும் சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.