AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை..

US President Donald Trump: 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அதிபர் டிரம்பிற்கு வழங்க வேண்டும் என அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடியரசு கட்சியின் உறுப்பினரான பட்டி கார்டர் நோபல் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் எழுதி அதிபர் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயர் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2025 10:21 AM IST

அமைதிக்கான நோபல் பரிசிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினரான கார்டர் நோபல் பரிசு குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடந்து போரை நிறுத்த அதிபர் டிரம்பின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு குழுவிற்கு நாடாளுமன்ற பிரதிநிதி பட்டி கார்ட்டர் எழுதிய கடிதத்தில் 12 நாட்கள் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து பிராந்திய மோதலை தவிர்க்க உதவியதற்காக டிரம்பிற்கு கார்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் டிரம்பின் தலைமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவியதோடு மட்டுமல்லாமல் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடான ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதை தடுத்தது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா:

ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத உலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் வகையில் ஈரானும் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்கா திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில் ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத உலைகளை குறிவைத்து தாக்கினோம். என தெரிவித்தார். இதனால் ஈரான் அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கத்தாரில் இருக்கக்கூடிய அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம்:

இந்த நடவடிக்கை உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கும் போருக்கு நடுவில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியதன் காரணமாக இந்த போர் அடுத்த கட்டத்திற்கு நோக்கி செல்லும் எனவும் இது அமைதிக்கான வழி இல்லை எனவும் ஐநா சபை கவலை தெரிவித்திருந்தது. இது அத்துமீறல் எனவும் அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்திருந்தது. இப்படியான சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கக்கூடிய போர் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை:


அதனை தொடர்ந்து ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கக்கூடிய போரானது நிறுத்தப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பங்கு அசாதாரணமான ஒன்று என குறிப்பிட்ட கார்ட்டர் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளார். போரை தடுப்பது சர்வதேச நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்று அனைத்திலும் சிறந்து விளங்குவதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கார்டர் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரப்பூர்வ நோபல் வலைதளத்தின் படி 2025 ஆம் ஆண்டுக்கான அமைதி பரிசுக்கு தற்போது வரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

Follow Us