Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து.. 11 பேர் உயிரிழந்த சோகம்..

Sudan Gold Mine Accident: சூடானின் வடகிழக்கு பகுதியில், தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுரங்க இடிப்பாடுகளில் சிக்கி 14 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து.. 11 பேர் உயிரிழந்த சோகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 11:11 AM IST

சூடான், ஜூன் 30, 2025: சூடானின் வடகிழக்கில் இருக்கக்கூடிய ஒரு பாரம்பரிய தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக அரசு சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது. சூடான் ஆயுதப்படைகள் மற்றும் விரைவான ஆதரவு படைகள் (RSF) அதாவது ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் இடையேயான உள்நாட்டுப் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு இந்த போரானது தொடங்கப்பட்டது. போர் நடந்து வரும் நிலையில் அதற்கான நிதி பெரும் அளவு சூடானில் இருக்கக்கூடிய தங்கத் தொழிலால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சூடானின் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:

சூடானிய கனிமவள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சூடானின் வடகிழக்கு செங்கடல் மாநிலத்தில் உள்ள SAF கட்டுப்பாட்டில் உள்ள அட்பாராவிற்கும் ஹயாவிற்கும் இடையில் அமைந்துள்ள ஹோவெய்டின் பாலைவனப் பகுதியில் உள்ள கிர்ஷ் அல்-ஃபில் சுரங்கத்தில் உள்ள ஒரு கைவினைஞர் தண்டில் இந்த சரிவு ஏற்பட்டதாகக்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு கண்டத்தின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் ஆனால் சிறிய அளவிலான தங்க சுரங்கங்கள் பெரும்பாலான தங்கத்தை வழங்குகிறது. நவீன தொழில் துறை வசதிகளை கொண்டதாக இல்லாமல் இந்த சுரங்கங்கள் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாதவை மற்றும் அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அருகில் இருக்கக்கூடிய பகுதிகளில் நோய் பரவும் அபாயமும் அவ்வப்போது ஏற்படுகிறது.

சுரங்க விபத்துகள்:

தங்க சுரங்க சரிவுகளும் இப்பகுதியில் மிகவும் பொதுவானதாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இதே போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுரங்க இடிப்பாடுகளில் சிக்கி 14 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 38 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சுருங்கத் தொழில் வட்டாரங்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி 25 பில்லியன் மக்களை உணவு பற்றாக்குறைக்கு தள்ளி உள்ள இந்த போருக்கு முன்பு இந்த சுரங்கங்கள் மூலம் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இங்கு வெட்டப்பட்டு எடுக்கும் தங்கு கட்டிகள் அனைத்துமே உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் பெரும் பகுதி சாட், தெற்கு சூடான் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உலகின் இரண்டாவது பெரிய தங்க ஏற்றுமதியாளரான ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைவதாக குறிப்பிட்டுள்ளனர்