Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!

Australia Woman Cryptic Pregnancy Story | ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்திற்குள்ளாக குழந்தையை பெற்றடுத்துள்ளார். Cryptic Pregnancy என்ற மருத்துவ பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரியாமலே இருந்துள்ளது.

கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jul 2025 11:59 AM

ஆஸ்திரேலியா, ஜூலை 15 : ஆஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த அடுத்த 17 மணி நேரங்களுக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். Cryptic Pregnancy என்ற அரிதான மருத்துவ காரணத்தால் அவருக்கு தான் கற்பமாக இருப்பதே தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த அடுத்த 17 மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்தது எப்படி என்பது குறித்து அவர் தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் சார்லட் சம்மர்ஸ். இவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த அடுத்த 17 மணி நேரத்திற்குள்ளாகவே நல்ல ஆரோக்கியமான ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அது எப்படி சாத்தியமாகும் என உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு பெயர் தான் Cryptic Pregnancy. இந்த மருத்துவ சிக்கல் காரணமாக தான் கர்ப்பமாக இருப்பதை சார்லட் உணராமலே இருந்துள்ளார். சற்று உடல் எடை மட்டும் அதிகரித்த நிலையில், அதற்கு ஏற்ப உடைகளை வாங்கி அணிந்துள்ளார். ஆனால், கடைசில் வரை சார்லட்டுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்துள்ளது.

தனது கதையை டிக்டாக்கில் பகிர்ந்த் சார்லெட்

இது குறித்து தனது டிக் டாக் வீடியோவில் கூறியுள்ள சார்லட், நான் இன்னும் பெரிய அளவிலான உடைகளை வாங்கி அணிகிறேன். நான் இரண்டரை ஆண்டுகளாக காதல் உறவில் இருக்கிறேன். அதனால், மகிழ்ச்சியின் காரணமாக சற்று உடல் எடை அதிகரித்திருக்கலாம் என நினைத்திருந்தேன். எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது மருத்துவர்கள் என்னை கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ள கூறினர். மருத்துவ பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே சார்லட்டின் காதலனின் குடும்பத்தினர் அவரை அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) பரிசோதனைக்கான அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : உயிருடன் இருக்கும் தாயை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற மகன்.. சீனாவில் விநோத சம்பவம்!

அப்போது சாரலட் 38 வாரங்கள், 4 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். காரணம் சார்லட்டுக்கு கார்ப்ப கால அறிகுறிகள் எதுவும் தெரியாமலே இருந்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது சார்லட் மற்றும் அவரது காதலருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் காத்துக்கொண்டு இருந்தது. அதாவது சார்லெட்டின் கர்ப்ப பையில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு 17 மணி நேரத்திற்குள்ளாக ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.