ஆண்மை நீக்கம், ஆயுள் தண்டனை.. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை!
Madagascar Imposes Harsh Sentence for Child Assaulter | உலக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் மீது மிக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மடகாஸ்கரில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

அன்டநாரிவோ, ஜூலை 15 : பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், மடகாஸ்கரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சி செய்த நபருக்கு நீதிமனறம் மிக கடுமையான தண்டனைகளை விதித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் இத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்ற நபர்
தீவு நாடான மடகாஸ்கரின் ஆன்டனநாரிவோவில் ஆறு வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமன்றி அவர் அந்த சிறுமையை கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அபோது வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனைகளை விதித்துள்ளார். அதாவது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த நபருக்கு ஆண்மை நீக்கவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
முதல் முறையாக அமல்படுத்தப்படும் மிக கடுமையான தண்டனை
மடகாஸ்கரில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த சட்டத்தை மையப்படுத்தி முதல் முறையாக தற்போது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : உயிருடன் இருக்கும் தாயை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற மகன்.. சீனாவில் விநோத சம்பவம்!
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிகளை பின்பற்றும் நாடுகள்
மடகாஸ்கரில் மட்டுமன்றி மேலும் சில உலக நாடுகளிலும் பாலியல் குற்றங்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனை விதிகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக செக் குடியரசு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஒப்புதலுடன் இத்தகைய தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு இந்த சட்டம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், போலந்து மற்றும் தென்கொரியா நாடுகளிலும் இந்த தண்டனை முறை பின்பற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மடகாஸ்கரில் வழங்கப்பட்ட இந்த தண்டனை அந்த நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.