ரஷ்யா நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப உத்தரவு.. அதிபர் டிரம்ப் அதிரடி..
President Donald Trump: அதிபர் டிரம்ப் கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்தும்படி பல கட்டங்களில் கேட்டிருந்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், ரஷ்யா நோக்கி இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அவர் பதவியேற்றதிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை தான் நிறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வந்தபோது இருநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார்.
சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் ஏற்பட்ட மோதல்களை நிறுத்தும்படி இருநாட்டு தலைவர்களுக்கும் அழைத்து பேசியிருந்தால். அதனை தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே இருந்த மோதலானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு:
இப்படி பல்வேறு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய போர் பதற்றத்தை குறைத்து வரும் அதிபர் டிரம்ப் கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்தும்படி பல கட்டங்களில் கேட்டிருந்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. ஏற்கனவே தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நடந்த மோதல்களுக்கு நடுவில் அவரது சமூக வலைதள பக்கத்தில் போரை நிறுத்த வர்த்தகம் உதவுமானால் அதை பயன்படுத்துவதில் நான் பெருமை அடைகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரியை ஒத்திவைத்த அமெரிக்கா.. புது தேதி என்ன தெரியுமா?
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் தொடர் மோதல் நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் கூடுதல் வரிவிதிப்பையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா எல்லையில் நிறுத்த உத்தரவு:
இந்நிலையில் அதிபரின் சமூக வலைத்தள பக்கத்தில், “ ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிக முக்கியமானவை, மேலும் அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: ”இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. இப்போ தாய்லாந்து கம்போடியா” – அதிபர் டிரம்ப்..
இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் டிமிட்ரி வெளியிட்ட பதிவில், ரஷியா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும் மிரட்டல், போருக்கான பாதை என குறிப்பிட்டிருந்தார். இரண்டு அனு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கி கப்பல் ரஷ்யா எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.