Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. இப்போ தாய்லாந்து கம்போடியா” – அதிபர் டிரம்ப்..

Thailand Cambodia Ceasefire: எல்லையில் ஏற்பட்ட கன்னிவெடி வெடிப்பில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததை தொடர்ந்து ஜூலை 24, 2025 அன்று இந்த சண்டை தொடங்கியது. இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தான் தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

”இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. இப்போ தாய்லாந்து கம்போடியா” – அதிபர் டிரம்ப்..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jul 2025 11:24 AM

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நிலைமை குறித்து பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், “ தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்து வருகிறது. இரு நாடுகளின் பிரதமர்களையும் நேரில் அழைத்து சண்டையை நிறுத்தாவிட்டால் எந்த வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என எச்சரிக்கை விடுத்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நடந்த சண்டையில் சுமார் 33 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது போல தாய்லாந்து மற்றும் கம்போடிய இடையேயான போரையும் தற்போது நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல்:

எல்லையில் ஏற்பட்ட கன்னிவெடி வெடிப்பில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததை தொடர்ந்து ஜூலை 24, 2025 அன்று இந்த சண்டை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். மேலும் இரண்டு நாடுகளும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக தாய்லாந்து கம்போடியா உடனான எல்லைகள் மூடப்பட்டது. மேலும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

Also Read: கின்னஸ் சாதனை படைத்த வெறும் 21 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை!

போர் நிறுத்தாவிட்டால் வர்த்தகம் இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்:


இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ நாங்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியா உடன் நிறைய வர்த்தகம் செய்கிறோம். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதாக நான் அறிந்துகொள்ளேன். இந்தியாவையும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கக்கூடிய மோதலை நான் தீர்த்து வைத்ததால், இது எனக்கு எளிதான ஒன்றாக இருக்கும்.

நான் இரு நாடுகளின் (தாய்லாந்து கம்போடியா) பிரதமர்களை அழைத்து நீங்கள் போரை தீர்த்து வைக்கவிட்டால் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை செய்யப்போவதில்லை என்று சொன்னேன். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டி உள்ளனர் என நினைக்கிறேன். போர் நிறுத்த விஷயம் தொடர்பாக நான் வர்த்தகத்தை பயன்படுத்தினால் அது எனக்கு பெருமையான விஷயம்தான்” என தெரிவித்துள்ளார்