Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10 மாத குழந்தையின் உடலில் 600 முறை ஊசியால் குத்திய கொடூர தாய்.. சீனாவில் பகீர் சம்பவம்!

Mother Stabbed Infant With Needle | சீனாவை சேர்ந்த தாய் ஒருவர் தனது 10 மாத குழந்தை சொல் பேச்சை கேட்டவில்லை என சுமார் 600 முறை அந்த குழந்தையின் உடலில் ஊசியை குத்தி துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மாத குழந்தையின் உடலில் 600 முறை ஊசியால் குத்திய கொடூர தாய்.. சீனாவில் பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jan 2026 12:54 PM IST

யுவான், ஜனவரி 31 : பிள்ளைகள் அடம் பிடித்தாலோ அல்லது சொல் பேச்சை கேட்கவில்லை என்றாலோ அவர்களை பெற்றோர்கள் தண்டிப்பது இயல்பானது தான். ஆனால், சீனாவை (China) சேர்ந்த தாய் ஒருவர் தனது 10 மாத ஆண் குழந்தை அடங்கவில்லை என கூறி அந்த குழந்தையின் உடலில் சுமார் 600 முறை ஊசியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தாய்க்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பெற்ற தாயே தனது 10 மாத பச்சிளம் குழந்தையை ஊசியால் குத்தி துன்புறுத்திய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

10 மாத குழந்தையை 600 முறை ஊசியால் குத்திய தாய்

சீனாவின், யுவான் மாகாணத்தை சேர்ந்த டவோ என்ற பெண் தனது 10 மாத பச்சிளம் குழந்தையை சுமார் 500 முதல் 600 முறை ஊசியால் குத்தி துன்புறுத்தியுள்ளார். குழந்தை அதிக காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல குறைப்பாடுகள் ஏற்படும் போது அதிக அளவு அழுத நிலையில், அந்த குழந்தையை மிரட்டுவதற்காக அந்த பெண் இத்தகைய கொடூர செயலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. விமானங்கள் ரத்து!

குழந்தையின் கழுத்து பகுதியில் சிக்கிக்கொண்ட ஊசி

டிசம்பர் 16, 2026 அன்று யுவானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 10 மாத குழந்தை ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் வென்யுவான் குழந்தையின் உடலில் பல இடங்களில் ஊசி குத்தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளார். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தை அழாமல் இருக்க அதனை மிரட்டும் வகையில் குழந்தையின் தாய் 500 முதல் 600 முறை குழந்தையின் உடலில் ஊழியால் குத்தியது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தோனேசியாவின் கசோங்கன் மார்கெட்டில் பெரும் தீ விபத்து.. முழுவதும் எரிந்து சேதமானது!

இவ்வாறு அந்த பெண் தனது குழந்தையின் உடலில் ஊழியால் குத்தியபோது கழுத்து பகுதியில் ஊசி சிக்கிக்கொண்டுள்ளது. அந்த ஊசியில் ஏற்பட்ட துரு காரணமாக குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குழந்தையின் சிக்கலை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கழுத்தில் இருந்த ஊசியை அகற்றியுள்ளனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் உள்ளது.

இந்த விவகாரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், குழந்தையின் தாய் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.