Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு குழந்தைக்கு ரூ.50,000.. மக்கள் தொகையை அதிகரிக்க சீனா கையில் எடுத்துள்ள புதிய முயற்சி!

China's Shrinking Population | சீனாவில் மக்கள் தொகையை குறைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக மக்கள் தொகை அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தொகையில் சீனா பின்தங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் மக்கள் தொகையை அதிகரிக்கும் கட்டாயத்திற்கு சீனா தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு குழந்தைக்கு ரூ.50,000.. மக்கள் தொகையை அதிகரிக்க சீனா கையில் எடுத்துள்ள புதிய முயற்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jul 2025 12:52 PM

சீனா, ஜூலை 30 : சீனாவில் (China) மக்கள் தொகை (Population) எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க புதிய முயற்சியை சீனா கையில் எடுத்துள்ளது. அதாவது, சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் அந்த நாட்டு அரசு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் மூன்று வயது வரை ஆண்டுக்கு ரூ.50,00 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் அதிரடியாக குறைந்த மக்கள் தொகை எண்ணிக்கை

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்கியது. இதன் காரணமாக மக்கள் தொகையை குறைக்க அந்த நாட்டு அரசு கடும் விதிகளை அமல்படுத்தியது. இந்த நிலையில், 140 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதல் இடம் வகிக்கும் நிலையில், சீனா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு குறைந்துக்கொண்டே வருகிறது.

இதையும் படிங்க : ”இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. இப்போ தாய்லாந்து கம்போடியா” – அதிபர் டிரம்ப்..

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தான் எதிர்ப்பார்த்ததை விட மக்கள் தொகை பல மடங்கு சரிந்ததால் சீனா மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளது. சீனாவின் இந்த நிலைக்கு குழந்தை பராமரிப்பு, கல்வி செலவு, வேலையின்மை உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. இவ்வாறு நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்துக்கொண்டே சென்றால் அது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் புதிய முயற்சி ஒன்றை சீனா கையில் எடுத்துள்ளது.

மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம் தீட்டிய சீனா

தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக சீனா புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, 2025, ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 3,600 யுவான் என்றால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000 ஆகும். அதன்படி, சீனாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. என்னாச்சு?

குழந்தைகள் தங்களது மூன்று வயதை அடையும் வரை இந்த ரூ.50,000 பணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1.50 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.