Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்.. என்னாச்சு?

America Airlines Plane Catches Fire : அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானத்தில் டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்..  அலறி அடித்து ஓடிய பயணிகள்.. என்னாச்சு?
அமெரிக்க விமானம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 11:28 AM

அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானத்தில் டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீப காலமாகவே, விமான விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், அவ்வப்போது விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் விமானத்தில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அண்மையில் கூட, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இது உலகத்தையே உலுக்கியது. தொடர்ந்து, ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த விமானத்தின் டயர்

இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானத்தில் டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தால் இயக்கப்படும் ஏஏ-3023 விமானம் மியாமிக்குச் செல்ல விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் இருந்தனர்.

Also Read : கழிவறையில் ரகசிய கேமரா.. 13,000 வீடியோக்களை எடுத்ததாக வாக்குமூலம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

டென்வர் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, திடீரென விமானத்தில் டயர் தீப்பிடித்தது பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறி அடித்து ஒடி வந்தனர். உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

பரபரப்பு காட்சி

இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், விமானத்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக விமான போக்குவரத்து கூட்டமைப்பு விசாரித்து வருகிறது.

Also Read : தாய்லாந்து – கம்போடியா மோதல்.. இந்திய மக்களுக்கு எச்சரிக்கை!

இதுகுறித்து அமெரிக்க ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, தரையிறங்கும் கியரில் உள்ள ஒரு டயரில் தொழில்நுட்ப சிக்கல்” ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்தது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறங்கினர். எங்கள் பராமரிப்பு குழுவினரால் ஆய்வு செய்வதற்காக விமானம் சேவை ரத்து செய்யப்பட்டது” என கூறியது.