Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விவாகரத்தான சோகம்.. ஒரு மாதத்தில் 100 பீர் குடித்த நபர் பலி.. தாய்லாந்தில் சோக சம்பவம்!

Thailand Man Died of Consuming 100 Beer | தாய்லாந்தை சேர்ந்த தாவேசக் நாம்வோங்சா என்ற 44 வயது நபர் ஒருவர் தனக்கு விவாகரத்து ஆன சோகத்தில் தொடர்ந்து ஒரு மாதம் பீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். ஒரு மாதத்தில் 100 பீர் குடித்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விவாகரத்தான சோகம்.. ஒரு மாதத்தில் 100 பீர் குடித்த நபர் பலி.. தாய்லாந்தில் சோக சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jul 2025 17:29 PM IST

தாய்லாந்து, ஜூலை 26 : தாய்லாந்தில் (Thailand) விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதம் உணவு உண்ணாமல் மது அருந்தி வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் அதிக மன அழுத்தம் காரணமாக ஒரே மாத்தத்தில் மட்டும் 100 பாட்டில் பீர் குடித்துள்ளார். இதுதான் அவர் உயிரிழக்க காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தாய்லாந்தில் ஒரு மாதம் முழுவதும் பீர் மட்டுமே குடித்து வந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதம் முழுவதும் பீர் குடித்த நபர் பலி

தாய்லாந்தின் பான் சாங் மாவட்டத்தில் தாவேசக் நாம்வோங்சா என்ற நபர் வசித்து வந்துள்ளார். 44 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து நடைபெற்றுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் ஒரு மாதம் முழுவதும் பீர் குடித்துள்ளார். அதன்படி, ஒரு மாதத்தில் மட்டும் 100 பீர் குடித்த அவர், திட உணவுகள் எதையும் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்த நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : Russia Flight Accident : கீழே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்.. 49 பேர் பலி?.. மீட்பு பணிகள் தீவிரம்!

சாப்பிடாமல் பீர் மட்டுமே குடித்து வந்த தாவேசக் நாம்வோங்சா

விவாகரத்துக்கு பிறகு தாவேசக் நாம்வோங்சா தனது 17 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளி முடிந்து வரும் சிறுவன் தனது தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார். ஆனால், தினமும் உணவு சாப்பிட அவர் மறுத்துள்ளார். இவ்வாறு உணவு, தண்ணீர் என எதுவுமின்றி ஒரு மாதத்திற்கு வெறும் பீர் மட்டுமே அவர் குடித்து வந்துள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை.. ஒரே நாளில் பல உயிரிழப்புகள்!

பிரேத பரிசோதனைக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மருத்துவர்கள்

தாவேசக் நாம்வோங்சாவின் மகன் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது தனது தந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்திற்கு அதிக அளவில் பீர் குடித்ததே காரணம் என கருதும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே காரணத்தை உறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.