ஒரு மணி நேரத்தில் 5 முறை.. ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
Russia Earthquake : ரஷ்யாவில் 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, ஜூலை 20 : ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Russia Earthquake) ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் ஐந்து முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கே உள்ள கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியது. மேலும், மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை (Russia Tsunami Warning) விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால், அந்த நாடுகளில் பெரும் சேதம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அந்நாடுகளில் ஏற்பட்ட சேதம், பொருளாதார சிக்கல்களையும் ஏற்படுத்தியது. தற்போது இருநாடுகளும் இயல்பு திரும்பி விட்ட நிலையிலும், அவ்வப்போது அந்த நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அங்கு மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்ப்டடு வருகிறது. அந்த வகையில், 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.




Also Read : மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்!
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Notable quake, preliminary info: M 7.4 – 144 km E of Petropavlovsk-Kamchatsky, Russia https://t.co/VuLNVF3mt9
— USGS Earthquakes (@USGS_Quakes) July 20, 2025
காலை முதலே ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ரஷ்யாவின் தூர கிழக்கே உள்ள கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 151 கி.மீ கிழக்கே, 6.6 ரிக்டர் அளவுகோலிலும், 6.7 ரிக்டர் அளவுகோலிலும், 7.0 ரிக்டர் அளவுகோலிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது, கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
Also Read : ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
நிலநடுக்கங்களால் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.