Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

900 Earthquakes in Japan in 2 Weeks | ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் வெளியேறும் சூழல் ஏற்படலாம் என்று பொதுமக்களை அரசு எச்சரித்து வருகிறது.

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 04 Jul 2025 07:39 AM

ஜப்பான், ஜூலை 04 : ஜப்பானில் (Japan) அடிக்கடி நிலநடுக்கம் (Earthquake) ஏற்படுவது வழக்கமாக உள்ள நிலையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் அங்கு சுமார் 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஜப்பானில் 2 வாரங்களில் மட்டும் 900 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்

ஜப்பான் சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளை அதிகம் சந்திக்கும் நாடாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அதன் புவி அமைப்பு தான். அதாவது, ஜப்பான் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. எப்போதும் சிறிய அளவிலான நிலநடுக்கம் அல்லது நில அதிர்வுகளை ஜப்பான் எதிர்க்கொண்டு வருகிறது.

2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ள நிலையில், ஜப்பானில் உள்ள டோகாரா தீவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில் 5.5 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம் தான் பெரிய அளவிலானதாக கருதப்படுகிறது.

பொதுமக்களை எச்சரித்து வரும் அரசாங்கம்

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அந்த பகுதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகலாம் என்றும், அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை அரசாங்கம் எச்சரித்து வருகிறது. இதனால் ஜப்பானின் டோகாரா தீவு சற்று பதற்றத்துடன் காணப்படுகிறது.