Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Liveable Cities 2025 : 2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள்.. பட்டியல் வெளியீடு!

World's Most Liveable Cities 2025 | 2025 ஆம் ஆண்டுக்கான உலகில் உயிர் வாழ தகுதியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், டாப் 10 இடங்களை பிடித்த நாடுகள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.

Liveable Cities 2025 : 2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள்.. பட்டியல் வெளியீடு!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2025 12:03 PM

சென்னை, ஜூன் 19 : 2025 ஆம் ஆண்டுக்கான உலகில் உயிர் வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் (Most Liveable Cities of the World 2025) வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் (Denmark Capital Copenhagen) முதல் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலை எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU – Economist Intelligence Unit) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள் எவை எவை, அதில் ஏதேனும் இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகில் உயிர் வாழ தகுதியான நகரங்களின் – பட்டியல் வெளியீடு

உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கலாச்சாரம், இட அமைப்பு, உணவு பழக்கம் என அனைத்திலும்  ஒன்றை விட ஒன்று வித்தியாசமாக இருக்கும். மேலும் அந்த நாட்டின் சுற்றுசூழல், அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை அவற்றுக்கு ஒரு அடையாளத்தை வழங்கும். இவ்வாறு ஒரு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மாணிக்கும் பல்வேறு காரணிகள் உள்ள நிலையில், உலகில் வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்ட பட்டியல்

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள டாப் 10 நகரங்கள் குறித்து பார்க்கலாம்.

  • டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  • ஆஸ்திரியாவின் வியன்னா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் சிட்னி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
  • ஜப்பானின் ஒசாகா பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
  • நியூசிலாந்தின் ஆக்லாந்து எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
  • கடனாவின் வான்கூவர் 10வது இடத்தை பிடித்துள்ளது.

உலகில் உயிர் வாழ தகுதியானதாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நகரங்கள் அதிக இடத்தை பிடித்துள்ளன.

கடைசி இடம் பிடித்துள்ள நகரங்கள்

இந்த பட்டியலில் வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா கடைசியில் இருந்து மூன்றாவது இடத்தையும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் ஆகிய நகரங்கள் கடைசியில் இருந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.