Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

6.2 Richter Earthquake Strikes Alaska | அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் காரணமாக அங்கு மிக கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2025 07:31 AM

அலஸ்கா, ஜூலை 21 : அமெரிக்காவின் (America) அலஸ்கா (Alaska) மாகாணத்தில் இன்று (ஜூலை 21, 2025) அதிகாலை சக்தியாவ்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அலஸ்காவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் அதிகமாக இருந்த நிலையில், அங்கு கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அங்கு ஏற்பட்ட நில அதிர்வுகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் இன்று (ஜூலை 21, 2025) அதிகாலை சக்தியாந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.58 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக 7.3 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அலஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டங்கள்.. சுனாமி எச்சரிக்கை?

6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவை உலுக்கிய நிலநடுக்கம்

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.