பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை.. ஒரே நாளில் பல உயிரிழப்புகள்!
Pakistan Heavy Rain | பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு பாகிஸ்தான் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அங்கு பொதுமக்களின்ன் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஜுலை 22 : பாகிஸ்தானின் (Pakistan) பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் சிந்த் பகுதி தொடர் மழையின் காரணமாக மிகுந்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில், அங்கு மழை தொடர்பான சேதங்கள் மற்றும் பாதிப்புகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் மழையின் தீவிரம் எப்படி உள்ளது, எங்கு எந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு பாகிஸ்தான் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அங்கு பொதுமக்களின்ன் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் சிந்த் பகுதி, மிக கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளது. சிந்த் மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்தது, மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட பல பாதிப்புகளால் அந்த மாகாணத்தில் ஒரே நாளில் நட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிங்க : ஒரு மணி நேரத்தில் 5 முறை.. ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
மிக கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தான் கனமழை
21.07.2025#Pakistan
Heavy rains from the ongoing #monsoon season triggered flash floods in Saidpur village in Islamabad. More than 145 mm of rain fell in a few hours. Streets were flooded, one car was washed away and houses were damaged by the overflow of seasonal rivers. pic.twitter.com/b5WnKYHEm8— Climate Review (@ClimateRe50366) July 21, 2025
மழை வெள்ளத்தில் மூழ்கிய மிக முக்கிய பகுதிகள்
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பலத்த காற்று வீசி வருவதால் மின் துண்டிப்பு ஏற்பட்டு, மின்சார இணைப்பை நீண்ட நேரம் சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கனமழையின் காரணமாக கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலைகள் அனைத்தும் முடங்கின. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிக கடுமையான வாழ்க்கை சூழலை எதிர்க்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.