Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!

Trump - Putin Talk | ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போருக்கு முடிவு கொண்டுவரும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியொர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!
டிரம்ப் மற்றும் புதின்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2025 07:16 AM

நியூயார்க், ஆகஸ்ட் 16 : ரஷ்யா – உக்ரைன் போர் (Russia – Ukraine War) விவகாரத்தில் டிரம்ப் உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என தான் நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், புதின் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைன் போர் – பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப் மற்றும் புதின்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீடித்து வரும் போருக்கு முடிவு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையானது அமெரிக்காவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று (ஆகஸ்ட் 15, 2025) நள்ளிரவு தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அவர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதையும் படிங்க : இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..

உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன் – புதின்

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதின் புகழ்ந்து பேசினார். அது குறித்த அவர் கூறியதாவது, எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும் டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறி இருந்தார். அது உண்மைதான் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் டிரம்புக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நான் நம்புகிறேன் என்று புதன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் அதிபரையும் அழைத்து பேசுவேன் – டொனால்ட் டிரம்ப்

இந்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  நாங்கள் மிக ஆக்கப்பூர்வமான கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். பல விஷயங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம். விரைவில் நேட்டோவை அழைத்து பேசுவேன். புதினை அழைத்து பேசியதை போல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அழைத்து பேசுவேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.