Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..

India Vs America Trade Talks: இந்திய பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் சுமார் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு கானும் வரையில் இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Aug 2025 09:35 AM

இந்தியா, ஆகஸ்ட் 9, 2025: இந்தியாவின் வர்த்தக கொள்கை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்த பிரச்சனை தீர்க்கப்படாதவரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்கிரன் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்ற வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டது. இருந்தபோதிலும் உக்கரின் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் கச்சா எண்ணையை இந்தியா அதிக அளவில் பெற்று உக்கிரனுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக நிதி வழங்குவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

வரி விதிப்பை கையில் எடுக்கும் டிரம்ப்:

மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறது. அதாவது அமெரிக்காவுக்கு ஒரு நாடு எத்தனை கோடி ரூபாய்க்கு பொருட்களை இறக்குமதி செய்கிறதோ, அதே அளவு அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டும் என்பது அதிபர் டிர்ம்பின் கூற்றாகும். இதில் பற்றாக்குறை இருக்கக்கூடிய நாடுகளை குறிவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விகிதத்தை செலுத்தி வருகிறார். சமீபத்தில் கனடா மீதும் அதிகபட்ச வரியை விதித்து அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் படிக்க: இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!

இந்தியாவுக்கு 50% வரி விதித்த அமெரிக்க அதிபர்:

அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீதம் வரியை விகித்தார். இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 1 2025 முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 25 சதவீதம் வரியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இந்த வரி விதிப்புக்கு இந்திய அரசாங்கம் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்

பிரச்சனை தீரும் வரை வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது:

இந்தியா அமெரிக்கா இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை பல சுற்றுகள் நடைபெற்ற நிலையில் 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி அமெரிக்கா குழு அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்காக இந்தியா வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுபோன்று சூழலில் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் ஒதுக்கப்படும் அதிக வரி ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.