Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியா மீதான 50% வரி நாளை முதல் அமல்.. அமெரிக்கா திட்டவட்டம்!

Additional 25 percentage tariff on India | இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்து அறிவித்த நிலையில், மீண்டும் 25 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார். இந்த வரி நாளை (ஆகஸ்ட் 27, 2025) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா மீதான 50% வரி நாளை முதல் அமல்.. அமெரிக்கா திட்டவட்டம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Aug 2025 11:12 AM

அமெரிக்கா, ஆகஸ்ட் 26 : இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) விதித்த கூடுதல் 25 சதவீத வரி நாளை (ஆகஸ்ட் 27, 2025) முதல் அமலுக்கு வர உள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளுக்கு வரி விதிக்கும்போது இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். தற்போது அந்த வரி தான் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முதலில் 25 சதவீதம் வரி விதித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா, அதிக வரி விதிப்பதாகவும் அதே அளவு வரியை இந்தியாவுக்கு விதிக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வரி விதித்த டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்து அறிவித்தார். இந்த நிலையில், உக்ரைன் உடன் போரிடும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றம் சாட்டி ஏற்கனவே வித்த 25 சதவீத விதியுடன் கூடுதலாக 25 சதவீத வரி விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா

நாளை முதல் அமலுக்கு வரும் 50 சதவீத வரி

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி வித்துள்ள நிலையில், அது நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு மூலம் உள்நாட்டு பாதுகாப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 06, 2025 அன்று டொனால்ட் டிரம்பின் உத்தரவு, வரிகள் உயர்த்துவதை உறுதிபடுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடு ஆகஸ்ட் 27, 2025 பின்னர், கிடங்குகளில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு ஆதரவாக வந்த குரல்.. களமிறங்கிய சீனா!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய தவறினால் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் காலங்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.