Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை.. பிரதமர் மோடியிடம் விளக்கிய அதிபர் புதின்..

President Putin Talks With PM Modi: ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து வரும் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப், ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடியிடம் தொலைப்பேசி மூலம் அதிபர் புதின் விளக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை.. பிரதமர் மோடியிடம் விளக்கிய அதிபர் புதின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Aug 2025 20:42 PM

அதிபர் புதின் – பிரதமர் மோடி: உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான உச்சி மாநாடு பற்றி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் உள்ள பல பகுதிகளை தாக்கி வருகிறது, அதற்குத் தக்க பதிலடியாக உக்ரைனும் எதிர்வினை வழங்கி வருகிறது. இந்த போர் இன்னும் முடிவடைந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 15, 2025 அன்று, ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ படைத்தளத்தில், இரு தலைவர்களும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் படிக்க: மலம் சேகரிக்கும் சூட்கேஸுடன் டிரம்ப்பை சந்தித்த ரஷ்ய அதிபர்? காரணம் என்ன?

உக்ரைனில் அமைதி நிலவும் என நம்புகிறேன் – அதிபர் புதின்:

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது, “எங்கள் இடையே நடைபெற்ற போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசியுள்ளோம். அதிபராக இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது என டிரம்ப் கூறியிருந்தார். அது உண்மைதான். அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைனில் அமைதி நிலவும் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: என்னது! டிரம்ப்பை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் இல்லையா? அவரைப் போன்ற வேறு நபரா?

உகரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் டிரம்ப்:

அதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ நாங்கள் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளோம். பல விஷயங்களை ஒப்புக்கொண்டுள்ளோம். விரைவில் நடுவை அழைத்து பேசுவேன். புதினை அழைத்து பேசியது போல, உக்ரைன் அதிபரையும் அழைத்து பேசுவேன்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரைன் அதிபருடனான பேச்சுவார்த்தை இன்று — அதாவது ஆகஸ்ட் 18, 2025 — நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றி விளக்கியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என ஆதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் – பிரதமர் மோடி:


இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், “ எனது நண்பர் ஜனாதிபதி புடினின் தொலைபேசி அழைப்புக்கும், அலாஸ்காவில் ஜனாதிபதி டிரம்புடனான சமீபத்திய சந்திப்பு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது, மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ச்சியான பரிமாற்றங்களை நான் எதிர்நோக்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.