Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலம் சேகரிக்கும் சூட்கேஸுடன் டிரம்ப்பை சந்தித்த ரஷ்ய அதிபர்? காரணம் என்ன?

Poop Suitcase : உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று சந்தித்தார். அப்போது அவரது பாதுகாவலர்கள் புதினின் மலம் சேகரிக்கும் சூட்கேஸ் ஒன்றை வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

மலம் சேகரிக்கும் சூட்கேஸுடன் டிரம்ப்பை சந்தித்த ரஷ்ய அதிபர்? காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Aug 2025 18:16 PM

உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ராணுவ படைத்தளமான ஆங்கரரேஞ்ச் பகுதியில் நடைபெற்றது.  சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போர் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய புதின், போர் தொடங்கியபோது தான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது என டிரம்ப் தெரிவித்தார். அது உண்மை தான் என்றார்.  இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாவலர்கள் மலம் சேகரிப்பதற்காக சிறப்பு சூட்கேஸ் வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம், அவர் பாதுகாவலர்களை அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் புதின் வெளிநாடு செல்லும்போது அவரது பாதுகாவலர்கள், தங்கள் கையோடு சூட்கேஸ் கொண்டு செல்வது வழக்கம். இந்த சூட்கேஸ் புதினின் மலத்தை சேகரிப்பதற்காக கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டிரம்ப்பை சந்தித்த போதும் புதினின் பாதுகாவலர்கள் இந்த சூட்கேஸை எடுத்து சென்றிருக்கின்றனர்.

இதையும் படிக்க : என்னது! டிரம்ப்பை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் இல்லையா? அவரைப் போன்ற வேறு நபரா?

மருத்துவ ரகசியத்தை காப்பதற்கான நடவடிக்கை

புதினின் உடல்நிலையை வெளிநாட்டு அரசுகள் தெரிந்து கொள்ளாமல் தடுக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கு சென்றாலும், அவரது பாதுகாவலர்கள் இந்த சூட்கேஸை எடுத்து செல்வார்கள். அவரது மலம், சிறுநீர் சேகரிக்கப்பட்டு மீண்டும் ரஷ்யாவுக்கே எடுத்து செல்லப்படும். இதன் மூலம் அவரது உடல் நிலை பிரச்னைகள் குறித்து பிற நாடுகள் அறிந்து கொள்ள முடியாது என கூறப்படுகிறது.

பழைய நடைமுறை

பிரான்சின் பாரிஸ் மேட்ச் இதழில் புலனாய்வு இதழில் வெளியான தகவலின் படி இந்த முறை புதிதல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டு புதின் பிரான்ஸ் சென்றபோது அவரின் பாதுகாவலர்கள் இது போன் சூட்கேஸ் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வியன்னா சென்ற போதும் தன்னுடன் இதுபோன்ற சூட்கேஸை எடுத்து சென்றிருக்கிறார். சில இடங்களில் அவர் கழிப்பறைகளை பயன்படுத்தாமல், சிறப்பு மொபைல் டாய்லெட் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற போதே இந்த நடவடிக்கையை பின்பற்ற தொடங்கியிருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் அவரது உடல் நிலை குறித்து எந்த தகவல்களும் வேறு நாடுகளுக்கு கசிந்துவிடக்கூடாது என அவர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!

புதினின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள்

ரஷ்ய அதிபர் புதினுக்கு தற்போது 72வயதாகிறது. அவரது உடல் நிலை குறித்து பல சந்தேகங்கள் இருந்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தவறி விழுந்ததாகவும், அவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் ஜெனரல் எஸ்விஆர் டெலிகிராம் சேனல் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவல் ரஷ்ய மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் அதனை ரஷ்ய அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைப் போலவே கடந்த 2023 ஆம் ஆண்டு பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவை சந்தித்தபோது கூடு புதினின் உடல் நடுக்கத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் 2024 ஆம் ஆண்டு நவம்பரில் புதின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் தனது காலை ஆட்டியபடி இருந்திருக்கிறார். இது பார்கின்சன்ஸ் நோயின் அறிகுறி என நரம்பியல் நிபுணர் டாக்டர் பாப் பெரூகிம் சந்தேகத்தை எழுப்பினார். ஆனால் அவரது உடல் நிலை குறித்து வெளிப்படையாக இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை.