Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்து உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 12:25 PM

சென்னை, ஆகஸ்ட் 30 :  ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு (Tamil Nadu Government) அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்னரே நடவடிக்கையை முடிக்க வேண்டும் என முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். தலைமைச் செயல் தொடங்கி அலுவலக உதவியாளர் வரை அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்காக பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதே நேரத்தில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பணிக்காலத்தில் மட்டுமில்லாமல், ஓய்வு காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணப்பலம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பணி காலத்தில் முறைகடு, லஞ்சம் மற்றும் பிற நடவடிக்கைகள் ஆளானால், அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல பலன்கள் கிடைக்காமல் போகும். சமீபத்தில் கூட, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெறும் நாள் அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Also Read : மனோன்மணியம் பல்கலை.யில் கோஷ்டி மோதல்.. காலவரையற்ற விடுமுறை.. என்ன நடந்தது?

ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை

இதனால், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இப்படியான சூழலில், அரசு ஊரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன்னரே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

Also Read : வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!

துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனை, குறிப்பாக பணிநீக்கம் செய்வது உரியதா என்பதை ஆராய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும் ஓய்வு பெறும் நாளில் இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இருக்காது” என குறிப்பிடப்பட்டுள்ளது.