Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனோன்மணியம் பல்கலை.யில் கோஷ்டி மோதல்.. காலவரையற்ற விடுமுறை.. என்ன நடந்தது?

Tirunelveli Manonmaniam Sundaranar University : திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதை அடுத்து, காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை பார்க் செய்தது தொடர்ந்து, இரு மாணவர்கள் குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில், பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

மனோன்மணியம் பல்கலை.யில் கோஷ்டி மோதல்.. காலவரையற்ற விடுமுறை..  என்ன நடந்தது?
மனோன்மணியம் பல்கலைக்கழகம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 07:08 AM

திருநெல்வேலி, ஆகஸ்ட் 30 : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் (Manonmaniam Sundaranar University) மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, வகுப்புகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.  திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் குழுவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஅதாவது, பல்கலைக்கழகம் நிர்வாகம் வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதித்திருந்தது. இருசக்கர வாகனங்களில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுற்றித்திரிவதால் இந்த தடை செய்யப்பட்டது. பல்கலைக்கழக நுழைவாயில் அருகே, வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் பல்கலைக்கழக வளாகத்தின் கேண்டீன் அருகே நிறுத்தினார்.

Also Read : கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

இதனை கண்ட, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து கோஷ்டி மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறதுஇதில் மாணவர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

இதனை அறிந்த பல்கலைக்கழக ஊழியர்கள் படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்இந்த மோதல் தொடர்பாக மதர் பக்கீர் (20), சுந்தர் ஜான் (21), அருள்முத்து செல்வம் (20) ஆகிய மூன்று மாணவர்கள் கைதாகி உள்ளதாக தெரிகிறது.

மோதலில் ஈடுபட்ட இரு மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதுஇந்த சம்பவம் இரு சமுதாயத்தினரிடையே சாதி மோதலாக உருவாகும் நிலை இருப்பதாக கூறப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!

அதாவது, முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மறுதேதி அறிவிக்கும் வரை யாரும் பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு கல்வி பயின்று வந்த மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.