Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை..

One Day Strike Protest: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் ஜூலை 9 2025 தேதியான இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.டி,சி,யு, திமுகவை சேர்ந்த தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலந்துக்கொள்கின்றனர்.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jul 2025 07:48 AM

சென்னை, ஜூலை 9, 2025: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்து 13 தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் ஜூலை 9 2025 தேதியான இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர். தேசிய அளவில் இருக்கக்கூடிய பல்வேறு முன்னணி தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

17 அம்ச கோரிக்கை முன் வைத்து போராட்டம்:

இதில் முக்கியமாக 44 தொழிலாளர் நல சட்டங்களில் 29 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி நான்கு தொகுப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவும், பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் சட்டம் திருத்தப்படுவதை கண்டித்தும் அந்த சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்பு:


இந்தப் போராட்டத்தில் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள், வருவாய் துறை அலுவலர் சங்கங்கள், போன்றவை இந்த வேலையில் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.டி,சி,யு, திமுகவை சேர்ந்த தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதே சமயம் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் மட்டும் இதில் பங்கேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை:

இப்படி போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 9 2025 தேதியான இன்று பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும் மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நோ வொர்க் நோ பே (no work, no pay ) என்ற அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.