உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
Ungaludan Stalin Scheme Name Allowed | உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி, ஆகஸ்ட் 06 : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் (Ungaludan Stalin Scheme) முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், உயந் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Drvaida Munnetra Kazhagam) முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு தற்போது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க : திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை.. ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்.. காவல்துறைக்கு பறந்த உத்தரவு




உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பிஆர் கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு தொடர்பான சுருக்கமான விவரங்களை பெற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 6, 2025 அன்று தள்ளி வைத்தனர். அதன்படி வழக்கு இன்று (ஆகஸ்ட் 06, 2025) விசாரணைக்கு வந்தது.
முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை – உச்சநீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை இல்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கில் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை நாங்கள் ஏற்கவில்லை என்றும் அரசியல் சண்டைகள் என்பது நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்ற நீதிபதிகள் மனு தாக்கல் செய்த சி.வி.சண்முகம் தரப்பிற்கு ரூபாய் பத்து லட்சம் அபராதம் விடுத்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.