Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Cabinet Meeting: ஆகஸ்ட் 14ல் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.. ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டமா..?

Tamil Nadu Cabinet Meeting on 2025 August 14: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 14, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்படலாம். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க திமுக அரசின் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு ஆகியவையும் விவாதிக்கப்படும்.

Tamil Nadu Cabinet Meeting: ஆகஸ்ட் 14ல் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.. ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டமா..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2025 17:47 PM

சென்னை, ஆகஸ்ட் 5: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் (Tamil Nadu Cabinet Meeting) வருகின்ற 2025 ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது தமிழ்நாட்டில் அரங்கேறும் ஆணவக்கொலைக்கு (Honour Killing) எதிராக தனிச்சட்டம் இயற்றப்படுவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்றும், முக்கிய திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சரியான முறையில் செல்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: வரும் 11, 12 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?

2026 சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் வருகின்ற 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதா என்பது குறித்தும், வேறு என்ன மாதிரியான திட்டங்கள் மக்களை தங்களது வாக்காளராக மாற்றும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்கப்படலாம். மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தலாம்.

அமைச்சரவை கூட்டம்:

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்:

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், திருநெல்வேலி, தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆணவக் கொலை அடுத்தடுத்து நிகழ்கிறது. சமீபத்தில், திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற நபரை, மாற்று சாதி இளைஞர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், காவல்துறையினர் ஆணவக்கொலை என தெரிவித்தனர்.

ALSO READ: பீகார் மக்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா..? நாம் தமிழர் கட்சி சீமான் ஆதங்கம்..!

இந்த சம்பவத்திற்கு பிறகு, பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்களும் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழ்நாட்டில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, வருகின்ற 2025 ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.