மதுரை மாநில மாநாடு – புதிய தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய் – காரணம் என்ன ?
TVK Madurai Maanaadu : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் வருகிற ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்காக, மாநாட்டுத் தேததியை மாற்றிக்கொள்ள மதுரை காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை ஏற்ற தவெக தலைவர் விஜய் மதுரை மாநாடு நடைபெறும் புதிய தேதியை அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25, 2025 நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பூமி பூஜை நடத்தப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால் மாநாடு தேதியை மாற்ற மதுரை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாநாடு நடைபெறும் புதிய தேதியை தவெக தலைவர் விஜய் (Vijay)அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெறுகிறது.
புதிய மாநாட்டுத் தேதியை அறிவித்த தவெக தலைவர் விஜய்
மதுரை மாநாடு குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும். எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.




தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று. மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி காரணமாக மாற்றம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 27, 2025 அன்று வர இருப்பதாலும், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில தினங்களுக்கு முன்பே திட்டமிட வேண்டியதாலும், மதுரை காவல் துறை மாநாட்டு தேதியை மாற்ற பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநாட்டு தேதியை ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதிக்குள் மாற்றுவதை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கட்சி நிர்வாகம் ஆகஸ்ட் 21-ம் தேதியை தேர்வு செய்திருக்கிறது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை
— TVK Vijay (@TVKVijayHQ) August 5, 2025
சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தவெகவின் இந்த மாநில மாநாடு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இந்த மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தங்களது பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநாட்டு பணிகளில் தவெகவினர் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.