நான் மெசேஜ் அனுப்பவில்லையா? ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரனுக்கு பதில்
O panneerselvam Sent Message To Nainar Nagendran : தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காண்பித்துள்ளார். 2025 ஜூலை 24, ஏப்ரல் 12ஆம் தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக ஓ.பன்னீர்செல்வம் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, ஆகஸ்ட் 03 : பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக 2025 ஜூலை 24ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) அனுப்பிய குறுஞ்செய்தியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Paneerselvam) வெளியிட்டார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு அவர் பதிலளிக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறிய நிலையில், தற்போது அதற்கான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார். இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அவர் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அதே நேரத்தில், பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதனால், அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என கூறினார். நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதியான நேற்று காட்டமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது, பாஜக மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும் என கூறினார்.
Also Read : முதல்வர் வேட்பாளர் யார்? இபிஎஸ் பெயரை தவிர்த்த அமித் ஷா.. விளக்கிய நயினார் நாகேந்திரன்!
ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்
அதோடு, பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் நான் சொல்லவில்லை என்பது உண்மைக்கு புறப்பானது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக, அவருக்கு 6 முறை தொலைபேசியில் அழைத்தேன், மெசேஜ் அனுப்பியும் இருந்தேன். ஆனால், அவர் எதற்கும் பதில் அளிக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுத்ததோடு, ஆதாரத்தை காட்டுங்கள் எனவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆனுப்பிய குறுஞ்செய்திகளை அவர் 2025 ஆகஸ்ட் 3ஆம் தேதியான இன்று வெளியிட்டிருக்கிறார்.
அதில், Honourable aiadmk coordinator o paneerselvam wants to speak with you என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “2025 ஜூலை 26ஆம் தேதி பிரதமர் வருவதறகு முன்பும், 2025 ஜூலை 12ஆம் தேதி, ஜூலை 24ஆம் தேதி என இரண்டு முறை நயினார் நாகேந்திரனுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால், இதற்கு எந்த பதிலும் அவர் தரப்பில் இருந்து வரவில்லை” என கூறினார்.
Also Read : ’நான் மானஸ்தன்’ அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதாரத்தை காட்டியதாக தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளிக்க விடாதல் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை அழைத்து சென்றார். மேலும், இதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க எனவும் குறிப்பிட்டார்.