’நான் மானஸ்தன்’ அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
AIADMK Former Minister Jayakumar : அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் மானஸ்தன் என்றும் உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவிற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

-சென்னை, ஆகஸ்ட் 03 : நான் அதிமுகவில் இருந்து விலகப் போகிறேன் என வதந்தி பரப்புகின்றனர் என்றும் உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவிற்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (Jayakumar) விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election) இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். திமுக வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) அண்மையில் அமைந்தது. மேலும், இரு கட்சிகளும் தங்கள் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைக்க முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் சேருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் அவருக்கு உடன்பாடு இல்லாததல், அவர் அதிருப்தியில் இருந்தாக சொல்லப்பட்டது. இதற்காக அவரை சமாதானப்படுத்த மாநிலங்களவை பதவி வழங்க கட்சி மேலிடமும் முடிவு எடுத்தாக தெரிகிறது.
ஆனால், சில காரணங்களுக்கான அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமி மீது ஜெயக்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருப்பதால், ஜெயக்குமார் விரைவில் திமுகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் கூட, அன்வர் ராஜா அதிமுகிவ்ல இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதேபோல, ஜெயக்குமாரும் இந்த முடிவை எடுப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், இதற்கு ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.




Also Read : நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்.. ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியீடு!
அதிமுகவில் இருந்து விலகுகிறேனா?
”என்னை பற்றி கூட வதந்தி பரப்புகின்றனர். என்னை குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர்களுக்கு நிறைய வருமானம் வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். நடக்காத ஒரு விஷயத்தை பேசுகிறார்கள். எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றம் தரும் விஷயம் தான். முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்பது. யார் வீட்டு வாசல் முன்பு பதவிக்காக நான் நின்றது இல்லை. நான் அப்படி கிடையாது. நாங்கள் திராவிட பார்வை, பெரியார் வழியில், அண்ணா வழியில் வந்தவர்கள். அண்ணாவுக்கு பிறகு எம்ஜிஆர்.
Also Read : ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.. திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
இந்த பாதையில் வந்த நான் அவ்வாறு இருக்கவே மாட்டேன். என் உடலில் அதிமுக ரத்தம் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு உயிர் அதிமுகவுக்கு. இதுதான் எங்கள் கொள்கை மற்றும் நிலைப்பாடு. இதுபற்றி மீடியால் என்னவென்றாலும் பேசுங்க. எனக்கு கவலை இல்லை” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச் செயலாளரே விளக்கம் கொடுத்துவிட்டார். அதுவே போதுமானது” என கூறினார்.