AIADMK : எடப்பாடி கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்.. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!
AIADMK General Secretary Case | அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 01 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) ரத்து செய்துள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு – நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவரை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிலையில், உட்கட்சி விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் விலைவாக அதிமுகவின் பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முதல் வேலையாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஈபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில், தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க : அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நாதக, விசிக.. வேறு லிஸ்டில் தவெக.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈபிஎஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை எதிர்த்து வழக்கு
இந்த நிலையில், ஈபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவுக்கு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 01, 2025) மனு தாக்கல் செய்திருந்தார். அதில் சூர்யமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : O. Panneerselvam Meets CM MK Stalin: ஒரே நாளில் 2 முறை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணியா..?
இதற்கு அதிமுகவின் கட்சி விதிகளின் படி பொதுச் செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சூர்யமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.