Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா? நாளை அறிவிக்கும் ஓபிஎஸ்!

O. Panneerselvam On Alliance : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி தொடர்பாக 2025 ஜூலை 31ஆம் தேதியான நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணியில் வெளியேறுவதாக தகவல் வெளிவரும் நிலையில், இதுபோன்ற முக்கிய அறிவிப்பை நாளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா? நாளை அறிவிக்கும் ஓபிஎஸ்!
ஓ.பன்னீர்செல்வம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jul 2025 20:13 PM

சென்னை, ஜூலை 30 : கூட்டணி தொடர்பாக 2025 ஜூலை 31ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது பெரிதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தவெகவுடம் சேருவாரா அல்லது அதிமுகவில் தொடர்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அண்மையில் அமைந்தது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும், இன்னும் தேமுதிக, பாமக கட்சிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருப்பார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஒன்றுப்பட்ட அதிமுக இணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என கூறி வருகிறார். இந்த சூழலில் தான், 2025 ஜூலை 26ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். தன்னை சந்திக்க அனுமதி வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க அனுமதி வழங்காத பிரதமர் மோடி, அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.

Also Read : அதிமுக விரிப்பது பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி..

கூட்டணி குறித்து நாளை அறிவிக்கும் ஓபிஎஸ்

இதனால், ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார். இதனை அடுத்து, கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையும் நடத்தி வருகிறார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளக்ரள் கூறி வருகின்றனர்.

மேலும், சிலர் தனியாக களம் காணவும் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, ஓ.பன்னீர்செல்வம் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், 2025 ஜூலை 30ஆம் தேதியான இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “கூட்டணி தொடர்பான அனைத்து விஷயங்களும் நாளை அறிவிக்கப்படும்.

Also Read : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பமா? அண்ணாமலை சொன்ன முக்கிய விஷயம்!

அவசர படாதீர்கள். நாளை வரை பொருமையாக இருங்கள். கூட்டணி தொடர்பாக நாளை அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அடுத்த கட்ட நகர்வு தமிழக அரசியலில் முக்கியத்துவம்  வாய்ந்த்தாக பார்க்கப்படுகிறது.  இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடக்க  உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.