O. Panneerselvam Meets CM MK Stalin: ஒரே நாளில் 2 முறை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணியா..?
OPS Quits NDA Alliance: ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுடனான கூட்டணி சாத்தியம் குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன. அவரது நடவடிக்கைகள் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஜூலை 31: தமிழ்நாட்டில் ஒரு பெரிய அரசியல் மாற்றமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) அறிவித்தார். வழக்கமான காலை நடைப்பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான (Tamil Nadu CM MK Stalin) சந்தித்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான சூழ்நிலையில் 2025 ஜூலை 31ம் தேதியான இன்று மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்தார். இதன்மூலம், ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்- ஓபிஎஸ் சந்திப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் நிமித்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற நிலைதான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்.” என்று தெரிவித்தார்.




ALSO READ: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..
தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா என்று கேள்வி எழுப்பியபோது, இதுகுறித்து பதிலளித்த ஓபிஎஸ், “விஜயுடன் நானும் பேசவில்லை, அவரும் என்னுடன் பேசவில்லை” என்று தெரிவித்தார். அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் இணைந்த அதிமுகவுக்கு வாழ்த்துகள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வம் நிராகரிக்கவில்லை. அப்போது, காலம் பதில் சொல்லும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறினார்.
ALSO READ: திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா.. பின்னணி என்ன?
ஓபிஎஸ் சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்:
உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!@OfficeOfOPS https://t.co/sZYq1Dl9uZ
— M.K.Stalin (@mkstalin) July 31, 2025
ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகிய காரணம் என்ன..?
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றபட்ட காரணத்தினால், தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி வைத்து கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில், அதிமுக – பாஜக ஒன்றாக கூட்டணி வைத்ததும், ஓபிஎஸ் அணி வெளியேறியது.