10 நாட்களுக்கு பின்.. தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்!
Tamil Nadu CM MK Stalin : 10 நாட்களுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று வருகை தருகிறார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூலை 27ஆம் தேதி வீடு திரும்பினார்.

சென்னை ஜூலை 31 : முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) 10 நாட்களுக்கு தலைமைச் செயலகம் செல்ல உள்ளார். மேலும், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் இருக்கிறார். உடல்நலக் குறைவு காரமணாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூலை 27ஆம் தேதி அவர் வீடு திரும்பிய நிலையில், 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று தனது வழக்கமான பணிகளை தொடங்க உள்ளார். 2025 ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2025 ஜூலை 21ஆம் தேதி வழக்கமாக காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவருக்கு, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால், உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்து. மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு பணிகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுடன் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, அவர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Also Read : பிரதமர் மோடியிடம் மனு.. முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்.. என்ன விஷயம்?




10 நாட்களுக்கு பிறகு பணிகளை தொடங்கும் முதல்வர்
உடல்நிலை சீரான நிலையில், முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூலை 27ஆம் தேதி வீடு திரும்பினார். பின்னர், சில நாட்கள் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று வழக்கமான தனது பணிகளை மேற்கொள்ள உள்ளார். 10 நாட்களுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூலை 31ஆம் தேதியான இன்று தலைமைச் செயலகம் செல்ல உள்ளார்.
தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்படி, ரூ.229 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டிடங்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், ரூ.27.4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2 மாநில வரி அலுவலக கட்டிடங்களையும், 12 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய 2 புதிய சார்பதிவாளர் அலுவலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
Also Read : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்!
மேலும், தட்டச்சர் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நாபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். அதோடு, காவல்துறை சார்பிலும், தீயணைப்பு துறை சார்பிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பிலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்க உள்ளார்.