நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ஆக். 2-ல் தொடங்கப்படும் என அறிவிப்பு..
Nalam Kaakum Stalin Scheme: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வரும் 2025, ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் 1,164 முகாம்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை 24, 2025: தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2, 2025 அன்று தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் நலன் கருத்தில் கொண்டு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் பன்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளலாம். முழு உடல் பரிசோதனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும் ரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ உள்ளிட்ட வை அடங்கும்.
விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்:
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவமனைக்கு வர முடியாத மக்களுக்காக அந்தந்த பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வருகின்ற 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் சென்னையில் மட்டும் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!
மேலும் இந்த முகாம்களில் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்கள் என 388 வட்டாரங்களில் 1164 முகாம்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதல் எண்ணிக்கையில் மக்களின் வசதிக்காக முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஓய்வு பெறும் சங்கர் ஜிவால்.. தமிழகத்தில் அடுத்த டிஜிபி யார்? ரேஸில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள்!
ரத்த பரிசோதனை முதல் எக்கோ வரை:
இந்த முகாம்களில் நடத்தப்படும் உடல் பரிசோதனையில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, எக்கோ, இசிஜி போன்ற முழு உடல் பரிசோதனைகளும், தொழுநோய், புற்றுநோய், காச நோய்க்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மருத்துவத்துறையின் ஆலோசனையும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது