Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓய்வு பெறும் சங்கர் ஜிவால்.. தமிழகத்தில் அடுத்த டிஜிபி யார்? ரேஸில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள்!

Tamil Nadu DGP : தமிழ்நாடு சட்டஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த ரேஸில் 8 சீனியர் அதிகாரிகள் உள்ளதாக தெரிகிறது.

ஓய்வு பெறும் சங்கர் ஜிவால்.. தமிழகத்தில் அடுத்த டிஜிபி யார்?  ரேஸில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள்!
டிஜிபி சங்கர் ஜிவால்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Jul 2025 22:24 PM

சென்னை, ஜூலை 23 : தமிழ்நாடு சட்டஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் (Tamil Nadu DGP Shankar Jiwal) பதவிக்காலம் நிறைவுடைய உள்ள நிலையில், அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக உள்துறை அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த டிஜிபிக்கான ரேஸில் எட்டு சீனியர் அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சட்டஒழுங்கு டிஜிபியாக இருந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில், இவரது பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது, 8 ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்து யூபிஎஸ்சி கமிட்டிக்கு தமிழக உள்துறை அனுப்பும். பின்னர், அவர்களில் இருந்து மூன்று பேரை யூபிஎஸ்சி கமிடி அனுப்பி. அந்த மூன்று பேரின் ஒருவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து நியமிப்பார்.

தற்போது, அந்த லிஸ்டில் சீனிவில் ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ் குமார், அபய்குமார, வினித் குமார் வான்கடே, வெங்கட்ராமன், மகேஷ் குமார் அகர்வால், சந்திப்ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பெயர்கள் லிஸ்டில் இருக்கிறது. இவர்களில் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சந்தீப்ராய் ரத்தோ பல மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவர் புதிய டிஜிபியாக நியமிக்க வாய்ப்புள்ளது. தொர்ந்து, பெண்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் வகையில், சீமா அகர்வாலும் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த டிஜிபி யார்?

இவர் டிஜிபியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், தமிழகத்தின் இரண்டாவது டிஜிபி என்ற பெருமையை சீமா அகர்வால் பெற உள்ளார். எனவே, சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோருக்கு சமவாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய விதியின்படி, 30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளே டிஜிபி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரிகள் 6 மாதங்கள் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு, பொருளாதாரக் குற்றப் பிரிவு, சைபர் குற்றப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருந்திருக்க வேண்டும்.

மேலும், டிஜிபியாக தேர்வு செய்யும் அதிகாரி மீது எந்த ஒரு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இருக்கக் கூடாது. இதன் அடிப்படையில் தான் டிஜிபி தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, சங்கர் ஜிவாலுக்கு பிறகு, அடுத்த டிஜிபியாக யார் பொறுப்பேர்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.