27 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பயங்கரவாதி.. எப்படி பிடிபட்டார்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்..
பல ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்த பயங்கரவாதிகள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீவிரவாத கைது சம்பவத்தில் கேரள மற்றும் ஆந்திரா காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இரண்டு பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்த பயங்கரவாதிகள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தீவிரவாத கைது சம்பவத்தில் கேரள மற்றும் ஆந்திரா காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இரண்டு பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு படையினர் ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பா அருகே உள்ள ராயச் சொட்டியில் அபூர் சித்திக்கை கைது செய்தனர். அப்போது சிறப்புப் படையால் மற்றொரு தேடப்படும் குற்றவாளி முகமது அலி, யூனிஸ் ஷேக் மன்சூரும் அடையாளம் காணப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் குற்றவாளிகள் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணர்களாக இருந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.