Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வர் வேட்பாளர் யார்? இபிஎஸ் பெயரை தவிர்த்த அமித் ஷா.. விளக்கிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran On CM Candidate : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, அதற்கு எடப்பாடி பழனிசாமி பெயரை மத்திய உள்துறை அமித் ஷா தவிர்த்தது தற்போது விவாதப் பொருளாக மாறிய நிலையில், நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார்? இபிஎஸ் பெயரை தவிர்த்த அமித் ஷா.. விளக்கிய நயினார் நாகேந்திரன்!
நயினார் நாகேந்திரன்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jun 2025 15:24 PM

சென்னை, ஜூன் 27 : தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA Alliance) முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா கூறாமல் தவிர்த்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு தான் தற்போது நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Polls)  இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்தாலும், இதில் சில குழப்பங்களுக்கு இன்னும் நீடித்து வருகிறது.

இபிஎஸ் பெயரை தவிர்த்த அமித் ஷா

அதாவது, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். அதே நேரத்தில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனால், இரு கட்சிகளிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

பல முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறி வருகிறார். எனவே, அதனையும் மீண்டும் அமித் ஷா திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.

அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து அமித் ஷா கூறியுள்ளார். குறிப்பாக, 2026 தேர்தல் தேசிய ஜனநாயாக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும், அதில் பாஜகவின் பங்கு இருக்கும் எனவும் அமித் ஷா கூறியுள்ளார். மேலும், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, அதிமுக தலைமையில் பாஜக போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதல்வர் வேட்பாளர் என அவர் கூறினார்.

அமித் ஷா பேட்டி

நயினார் நாகேந்திரன் விளக்கம்

ஆனால், எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா குறிப்பிடவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்த எடப்பாடி பழனிசாமி பெயரை அமித் ஷா தவிர்த்தது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.  இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். மத்திய உள்துறை அமித் ஷா ஏற்கனவே முதல்வர் வேட்பாளமாக எடப்பாடி பழனிசாமி பெயரை கூறி விட்டார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்.

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியும், அமித் ஷாவும் பேசி முடிவு எடுப்பார்கள்” என விளக்கம் அளித்தார். முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் எடுப்பதை இறுதி முடிவு. கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிசாமி தான்” எனக் கூறினார்.