தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க – உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன சூசக பதில்..
Amit Shah: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெறுமா என்ற கேள்விக்கு அதற்கு போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், கூடிய விரைவில் தெளிவாகிவிடும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அதற்கு தேர்தலுக்கு இன்னும் போதுமான காலம் இருப்பதாகவும், இன்னும் சில காலங்கள் காத்திருந்தால் அனைத்துமே தெளிவாகிவிடும் எனவும் பதில் அளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் மும்முறமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக இதற்கான ஆயத்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 202 1 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றாக சந்தித்தது.
15 ஆண்டுகளுக்கு பின் சட்டசபையில் நுழைந்த பாஜக:
2021 சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக நான்கு இடங்கள் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபையில் நுழைந்தது. அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே சந்தித்தது. ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக:
அதனைத் தொடர்ந்து மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தது. பின்னர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். முக்கியமாக பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்த அண்ணாமலையை நீக்கி புதிதாக நயினார் நாகேந்திரனை உள்துறை அமைச்சர் நியமனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டணி என்பது உறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெற்று இடம் பெற்றிருக்கும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி சந்திப்பது மக்களுக்கான தேவைகள் என்ன, தேர்தல் வியூகங்கள் என பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்:
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்… pic.twitter.com/iOqatw4mvS
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) June 25, 2025
அதில் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இதில் தொகுதி பணிகள் எப்படி உள்ளது மக்களின் மனநிலையை எப்படி இருக்கிறது தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாய கூட்டணியில் த.வெ.க இடம்பெறுமா – அமித்ஷா பதில்:
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். முக்கியமாக தமிழகத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் இன்னும் யாருடனும் கூட்டணி அமைக்காத நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்துமே தெளிவாகிவிடும் என பதிலளித்துள்ளார்.
அதிமுக தலைமையில் தான் ஆட்சி:
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு பங்கு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுவதாகவும் முதலமைச்சர். அதிமுகவிலிருந்து தான் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்
அதிமுகவில் இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரங்கள் குறித்து கேள்விக்கு, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற யாரையும் நாங்கள் ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. அது உட்கட்சி விவகாரம் அது அவர்களது கட்சியே சரி செய்ய வேண்டும் எனவும் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி மிகவும் வலுவாக தமிழகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்