Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் தமிழகம் வரும் அமித் ஷா.. ஜூலையில் நடக்கும் முக்கிய மீட்டிங்.. பின்னணி என்ன?

Amit Shah Tamil Nadu Visit : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை மாதத்தில் சென்னை வரும் அமித் ஷா, முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மீண்டும் தமிழகம் வரும் அமித் ஷா.. ஜூலையில் நடக்கும் முக்கிய மீட்டிங்.. பின்னணி என்ன?
அமித் ஷாImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Jun 2025 17:01 PM

சென்னை, ஜூன் 20 : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home Minister Amit Shah) 2025 ஜூலை மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு வர  (Amit Shah Tamil Nadu Visit) உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருகையின்போது, கூட்டணி கட்சி தலைவர்கள அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு  சட்டப்பேரவை தேர்தல் (2026 Assembly Election) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே இருப்பதால், அனைத்து கட்சிகளை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  மேலும், கூட்டணி தொடர்பாக பேச்சுகளும் இப்போதே அடிபட்டு வருகிறது.  இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மீண்டும் தமிழகம் வரும் அமித் ஷா

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி,  தமிழக வெற்றிக் கழகம் தனித்தனியே களம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் இந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது.  சமீபத்தில் தான் சென்னை வந்த அமித் ஷா,  இந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 7,8ஆம் தேதிகளில் மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமித் ஷா, பாஜக தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கட்சி பலப்படுத்த முக்கிய தலைவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். இந்த நிலையில், மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திட்டம் என்ன?

அதாவது, 2025 ஜூலை 8ஆம் தேதி அமித் ஷா சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி பாஜக தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. சென்னையில் சில முக்கிய தலைவர்களை அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை சந்தித் உள்ளதாகவும் தெரிகிறது. பாமகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் ஆமித் ஷா சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அமித் ஷாவின் சென்னை வரும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகளும் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கட்சியின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர உள்ளார். தனது முந்தைய பயணத்தின் போது வகுக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாநில அளவிலான தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களு ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.