Thirumavalavan: கூட்டணி ஆட்சி குறித்து பாஜக பேசுவது ஏன்..? திருமாவளவன் விளக்கம்!
Tamil Nadu Assembly Election 2026: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும், கூட்டணி ஆட்சி சாத்தியம் குறித்தும் பெரும் விவாதம் நிலவுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், பாஜக கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து பேசி வருகிறது. திருமாவளவன், பாஜகவின் இந்த நடவடிக்கை பாமக, தேமுதிகவை இழுக்க என்கிறார். அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூன் 17: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். இதற்கிடையில், பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி வைக்கமாட்டோம் என அறிவித்த அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ADMK), மீண்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமித் ஷா முன்னிலையில் அதிமுக- பாஜக கூட்டணி அறிவித்தது. முன்னதாக, தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்சிகளும் தேர்தலுக்காக மட்டுமே கைகோர்த்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக அல்ல என்று சூசகமாக கூறினார். இருப்பினும், ஒரு சில பாஜக கூட்டணி என்று கூறி வருகின்றனர். இந்தநிலையில், கூட்டணி ஆட்சி பற்றி பாஜக திரும்ப திரும்ப பேசுவது ஏன் என திருமாவளவன் (Thirumavalavan) கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமாவளவன் கேள்வி:
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சன் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த திருமாவளவன், “அதிமுக – பாஜக கூட்டணி தற்போது பேசுப்பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு 2 முறை வருகை புரிந்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு தந்தார். அத்துடன் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார். அவருடைய கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக தரப்பில் யாரும், உறுதிப்படுத்தவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை அமித்ஷாவின் கருத்திற்கு ஆதரவான கருத்தை எதுவும் சொல்லவில்லை. கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்படுகிறதா இல்லையா என்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தவும் இல்லை.




திருமாவளவன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு:
இன்று செய்தியாளர் சந்திப்பில்…. pic.twitter.com/cO5NtuGjzD
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 16, 2025
அதிமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்பாடாது என்பதுதான் பொதுவாக கருத்தாக இருக்கிறது. பாஜகவிற்கு இது தெரிந்தாலும் கூட, பாஜக தலைவர்கள் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்று சொல்வதற்கு காரணம், பாமகவையும், தேமுதிகவையும் இழுப்பதற்கான முயற்சிகளே ஆகும். ஒருவேளை கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்படுமே ஆனால், அவர்கள் தமிழ்நாட்டில் குறைவான எண்ணிக்கையிலான தொகுதியில் போட்டியிட வேண்டிய நெருக்கடி ஏற்படும். பாஜக கூடுதல் தொகுதியில் போட்டியிட்டு தங்களது சக்தியை நிரூபிக்க விரும்புவார்கள். அப்போதுதான், கூட்டணி ஆட்சிக்கான பேரத்தை பேச முடியும். அந்தநேரத்தில், அதிமுக இயல்பாகவே பலவீனப்படும் சூழ்நிலை உருவாகும். அது போக போக அதிமுகவிற்கு பின்னடைவை தரும்.” என்று தெரிவித்தார்.