Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu CM MK Stalin: வீடியோவிற்கே 10 ஆண்டுகள்! மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதம்.. கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

AIIMS Madurai Delay: மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் தாமதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அமித் ஷா மதுரைக்கு வந்தபோது எய்ம்ஸ் பணிகளை பார்வையிடாததை ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பின்னர் மத்திய அரசு வெளியிட்ட எய்ம்ஸ் வீடியோவை ஸ்டாலின் கற்பனைக் காட்சி என விமர்சித்து, 2026 தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

Tamil Nadu CM MK Stalin: வீடியோவிற்கே 10 ஆண்டுகள்! மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதம்.. கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
எய்ம்ஸ் மதுரை - முதலமைச்சர் ஸ்டாலின்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 17 Jun 2025 18:08 PM

சென்னை, ஜூன் 17: தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் (Dravida Munnetra Kazhagam), மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தொடர்ந்து கருத்தியல் ரீதியான மோதல் நிலவிவருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, மதுரை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் திமுக அரசு எதையும் முறையாக செயல்படுத்தவில்லை என்றும், வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறது என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு வந்திருந்த அமித்ஷா (Amit Shah) ஏன் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பார்வையிடவில்லை என கேள்வி எழுப்பினார். இதன் காரணமாகதான், இன்று அதாவது 2025 ஜூன் 17ம் தேதி எய்ம்ஸ் தொடர்பான வீடியோ மத்திய அரசு வெளியிட்டு இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

எய்ம்ஸ் வீடியோ குறித்து முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வீடியோவை எய்ம்ஸ், மதுரை என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதை ரீ – ட்வீட் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமீபத்தில் மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனை ன்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.

அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்:

அமித்ஷா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன..?

கடந்த 2025 ஜூன் 17ம் தேதி சேலத்தில் மேட்டூர் அணை மதகுகளை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், “என்னை உங்களில் ஒருவராகக் கருதுகிறீர்கள். இருப்பினும், சிலரால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, மேலும் அவர்கள் திமுக அரசாங்கத்தின் செல்வாக்கைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். சமீபத்தில் மதுரைக்கு வந்த அமித்ஷா, 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தின் நிலையை ஏன் பார்வையிடவில்லை. நிதி முறையாக ஒதுக்கப்பட்டிருந்தால், மருத்துவமனை (எய்ம்ஸ்) 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம்.” என்று தெரிவித்திருந்தார்.