Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழை கொட்டுமா? வானிலை மையம் தகவல்

Tamil Nadu Weather Update : ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், தென்மேற்கு வங்கதேசம், அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் 24 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கனமழை கொட்டுமா? வானிலை மையம் தகவல்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 14:30 PM

சென்னை, ஜூன் 17 :  ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் (IMD Weather Update) தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் பகுதியில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி நிலவி வரும் நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் உருவான இரு காற்றழுத்த தாழ்வு பகுதி

அதில், “வட அரேபிய கடல், குஜராத்தின் சில பகுதிகள், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், சத்தீஸ்கரின் பெரும்பாலான பகுதிகள், ஒடிசா பகுதிகள், ஜார்க்கண்டின் சில பகுதிகள், முழு கங்கை மேற்கு வங்காளமும், துணை இமயமலை, மேற்கு வங்காளத்தின் மீதமுள்ள பகுதிகளும், பீகாரின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தென்மேற்கு வங்க தேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கங்கை நதிப் பகுதியில் இன்று காலை 08.30 மணிக்கு உருவாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் கங்கை நதிப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று, ஜூன் 17, 2025 அன்று காலை 08.30 மணிக்கு அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை கொட்டுமா?

தமிழகத்தை பொறுத்தவரை, 2025 ஜூன் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவையில் கனமழையும், 2025 ஜூன் 18ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 17,18ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.