AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீலகிரி டூ கோவை.. 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி டூ கோவை.. 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 11:18 AM IST

சென்னை, ஜூன் 17 :  தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Weather Alert) வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை மிதமான மழைக்கு (Chennai Weather) வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. 2025 மே மாதத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. மே மாதத்தில் வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. 2025 மே 30ஆம் தேதிக்கு பிறகு பெரியளவில் மழை பொழிவு இல்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு  வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்த  நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதாவது, வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை


2025 ஜூன் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூன் 18ஆம் தேதியான நாளை நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2025 ஜூன் 17ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துளளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us