கை கொடுக்குமா முருக பக்தர்கள் மாநாடு? பாஜகவின் தேர்தல் பிளான் என்ன?
BJP Election Strategy: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது போல், தற்போது இந்த முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கபப்டிகிறது.

மதுரையில் வருகின்ற ஜூன் 22 2025 அன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதாவது அறுபடை வீடுகளில் இருக்கக்கூடிய முருகரை ஒரே இடத்தில் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் முருகர் மாநாட்டை பாஜக அரசியல் யுத்தியாக கையில் எடுத்துள்ளது. இந்த மாநாடு வருகின்ற தேர்தலில் பெருமளவு கை கொடுக்கும் என நம்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னால் பாஜக தரப்பில் வேல் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அதே பாணியில் தற்போது இந்து முன்னணி சார்பில் முருக பக்தர் மாநாடானது நடைபெற உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் எப்படியாவது பாஜக முன்னணி கட்சியாக இடம்பெற வேண்டும் என ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பொழுது பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்தித்தது. அதில் நான்கு தொகுதிகள் வெற்றி பெற்றது பாஜக. 2020 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. இந்த வேல் யாத்திரை நடத்தப்பட்டதன் மூலம் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்கள் வெற்றி பெற்றதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
வேல யாத்திரை பாணியில் முருக பக்தர்கள் மாநாடு:
ஜூன் 22 “மதுரையில் முருகன் மாநாடு”
பாஜக சார்பில் மதுரையில் முருகன் மாநாடு பாடல் வெளியீடு..!
மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களால் தமிழக பாஜக தலைமையிடமான சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக சார்பில் வெளியிட்டப்பட்ட பாடல்..!#MuruganManadu pic.twitter.com/AX2Y9nNVjm
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 17, 2025
அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போது பாஜக முருக பக்தர்கள் மாநாடை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது அரசியல் மாநாடு இல்லை என்றும் முருகர் பக்தர் மாநாடு, முருகர் பக்தர் யாராக இருந்தாலும் இதில் கலந்து கொள்ளலாம் திமுகவினரை சேர்ந்த முருக பக்தராக இருந்தாலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் இதில் கலந்து கொள்கிறார்.
முருக பக்தர்கள் மாநாடு என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவில் ஐயப்பன் சுவாமியை முன்வைத்த இதே போன்ற ஒரு நிகழ்வு நடந்ததாகவும், தற்போது தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முருகர் பக்தர் மாநாடு நடத்தப்படுவதாகவும் பிற கட்சிகள் சார்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது அரசியல் மாநாடாக இருக்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்று முருகரை கையில் எடுத்த நாங்கள் நாளை தமிழ்நாட்டை கையில் எடுப்போம் என பேசியுள்ளார்